IMPORTANT AWARDS IN WORLD AND INDIA - Agro Tamilan

Search For More Study Materials


 

Wednesday, 19 December 2018

IMPORTANT AWARDS IN WORLD AND INDIA

உலகின் சில முக்கிய விருதுகள்

🏆நோபல் பரிசு:

உலகின் மிக உயர்ந்த விருது. 1901 ஆம் ஆண்டு முதல் சமாதானம் உட்பட ஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.
DOWNLOAD THIS IN PDF


🏆ரைட் லைவ்லி ஹுட் விருது:

மாற்று நோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.

🏆காந்தி அமைதிப் பரிசு:

காந்திய வழியில் வன்முறை இன்றி போராடி வெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்கு இந்திய அரசு வழங்கும் சர்வதேச அமைதி விருது. காந்திஜியின் 125 ஆவது பிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒரு கோடி.


🏆இந்திரா காந்தி அமைதி மற்றும் வளர்ச்சி விருது:

இந்திய அரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.


🏆சர்வதேச புரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது:

இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் வழங்கும் விருது இது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் நல்ல விதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ₹ ரூ. 15 இலட்சம்.

🏆ஐ.நா. சுற்றுச்சூழல் விருது:

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.

🏆உல்ஃப் பரிசு (Wolf Prize):
இசைப் பணிக்கான சர்வதேச விருது

உலக உணவு விருது:
உலக மக்களுக்கு தரமான உணவு வகைகளைக் கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.

DOWNLOAD THIS IN PDF

🏆காமன்வெல்த் பிராந்திய எழுத்தாளர் விருது:

காமன்வெல்த் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.

🏆ஒலிம்பிக் ஆர்டர் விருது:

ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர் முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.

🏆புலிட்சர் விருது:

சர்வதேச அளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.

🏆ஒலாப் பால்மே பரிசு:

பொது நலச் சேவையில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம் டாலர்.

🏆டெம்பிள்டன் பரிசு:

சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.

DOWNLOAD THIS IN PDF

🏆யூதாண்ட் விருது:

நாடுகளுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கும் சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.

🏆ஜெஸ்ஸி ஒவன்ஸ் விருது:

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.

 🏆கலிங்கா விருது:

விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.


🏆மக்சாஸே விருது:

ஆசியாவின் நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாக வழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன் போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.

DOWNLOAD THIS IN PDF

🏆மகாத்மா காந்தி உலக அமைதி விருது:

சமாதான வழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன் வழங்கும் விருது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.

🏆புக்கர் பரிசு:

சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

DOWNLOAD THIS IN PDF

DOWNLOAD PROCEDURE
1. Click Download PDF
2. ✓I'm not robot
3. Click " create download link"
4. Click Download now

For more updates join us on telegram & YouTube

Telegram channel

YouTube channel


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();