மாடித்தோட்டம் - Agro Tamilan

Search For More Study Materials


 

Friday 24 November 2017

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம்

ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை வீட்டு தோட்டங்களில் காய்கறி,கீரைகள்,பூச்செடிகளை வளர்த்தால் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்ய முடியும். இதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும், நகரத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் மும்பையில் குடிசை பகுதிகளில் தொட்டிகளை வைக்க இடமில்லை என்றாலும் அவற்றை கயிற்றில் கட்டி கூரையின் பக்கவாட்டில் உள்ள கம்புகளில் தொங்கவிட்டு வளர்க்கிறார்கள்.
அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து உழைப்பையும் செலவுகளையும் பகிர்ந்துகொண்டால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நச்சுக்கள் கலக்காத காய்கறிகள் கிடைக்கும் அல்லவா? செடிகளுக்கு தண்ணீர் போற்றுவதும், அதை பராமரிப்பதும் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். அழகாக போது குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாட வரும் அணில்கள் மற்றும் குருவிகளும் யாருக்குத்தான் பிடிக்காது.
மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறை மானியம் மற்றும் விதைகள் வழங்குகிறது.


மாடித்தோட்டம் உருவாக்கும் முறைகள்:
பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளின் மேலும் ரோஜா செடிகளை வளர்ப்பதுண்டு. மாடிகளில் வளர்ப்பதற்கு ஏற்றவாறு ஓவல் அமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்கிறது.
நல்ல விளைச்சலை பெற வேண்டுமானால் முதலில் மண் ஆரோகியதுடன் இருக்க வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து மீதியை காற்றிலிருந்து பெற்று கொள்கிறது. அதனால் மண்ணும் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
செம்மண்ணும் மணலும் கலந்த கலவையோடு எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையை தொட்டிகளில் இட வேண்டும்.

ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.
தேவையான அளவு தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தை சேகரித்து வைத்திருப்பது நல்லது.
செடிகளை வளர்க்க தொட்டிகளை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை, இப்பொழுது நகரங்களில் கண்டைனர் விவசாயம் என்ற முறை பிரபலமாகி வருகிறது. அதாவது உபயோகமில்லாத பிளாஸ்டிக் டப்பாக்களை தொட்டிகளாக பயன்படுத்தும் முறை தான் இந்த முறை.
Subscribe to our youtube channel.
பழைய கேன்கள், பாட்டில்கள் மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழே இறக்கி வெட்டிவிட்டு அகலமான பகுதியை செடி வளர்ப்பிற்கு தொட்டியாக பயன்படுத்தலாம். அலங்கார பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்கள் போதுமானது. உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பாட்டில்களில் பெயிண்ட் வேலைப்பாடு செய்தால் அதுவே அழகான உள் அலங்காரமாக இருக்கும். வீட்டுக்குள் வைப்பதற்கென்று தனியாக குரோட்டோன் செடிகளை வளர்க்க தேவை இல்லை.
அனைவராலும் தோட்டம் அமைப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஒரே ஒரு ரோஜா செடி வளர்க்க முடியும். அச்செடி மொட்டுவிடும்பொழுதும் பூப்பூக்கும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது.

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();