பட்டுப்புழு வகைகள்.
.
நம் இந்திய நாட்டில், பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரிச்செடி வளர்ப்பிற்கான, சாதகமான சூழ்நிலைகள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் நிலவுகிறது.
.
நம் இந்திய நாட்டில், பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரிச்செடி வளர்ப்பிற்கான, சாதகமான சூழ்நிலைகள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் நிலவுகிறது.
இந்த மாநிலங்கள் மொத்த மல்பெரி வளர்ப்பில் 97 சதவீதமும் பட்டு நூல் உற்பத்தியில் 95 சதவீதமும் கிடைக்கிறது.
நம் நாட்டில், தமிழ்நாடு பட்டு உற்பத்தியில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 1956 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் பட்டு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர்ப்பானது, தமிழ்நாட்டில் இதர சமதளப்பரப்பிற்கும் பரவியது.
1979 ஆம் ஆண்டிலிருந்து தொழில்மட்டும் வணிக துறையின் கீழ் பட்டு வளர்ப்பு துறை, பட்டு வளர்ப்பு துறை ஒரு மேம்பாட்டு சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.ஆராய்ச்சி நிலையங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய செலவு குறைக்கும் தொழில்நுட்பங்களினால், (பட்டுப்புழுவிற்கான தனி அறை, மல்பெரி தண்டு அறுவடை முறையில் புழு வளர்ப்பு, இளம்புழுவை விவசாயிகளுக்கு வழங்குதல்) பட்டு மகசூலும் இலாபமும் விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கிறது.
Subscribe to youtube channel https://www.youtube.com/channel/UChPRY3dtikcO8qKei1YMZ5w?sub_confirmation=1
Subscribe to youtube channel https://www.youtube.com/channel/UChPRY3dtikcO8qKei1YMZ5w?sub_confirmation=1
தற்சமயம், தமிழ்நாட்டில் 30,000 விவசாயிகளால், 14,624 ஏக்கர் அளவு மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வளருகிறது. காஞ்சிபுரம், கும்பகோணம், ஆரணி, சேலம், கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள நெசவு நெய்யும் மையங்களில் கைத்தறியாக பட்டு நெய்யப்பட்டு வருகிறது.
மல்பெரி சாகுபடிபட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களும் பராமரிக்கப்படுகிறது.
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்குமிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் மல்பெரி 41,624 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இவை ஈரோடு, கோவை, தரிமபுரி, சேலம், மதுரை, வடஆற்காடு,கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.மல்பெரி இரகங்களில் இறவைப்பபயிருக்கு கன்வா 2, எம்ஆர்.2, மற்றும் வி.1 இரகங்கள் ஏற்றதாகும். இவற்றுள் வி.1 இரகமானது அதிகபட்சமாக ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 60 டன் இலை மகசூல் தரவல்லது. மற்ற இரகங்கள் ஆண்டிற்கு எக்டருக்கு 35-40 டன் இலை மகசூல் தரவல்லது. மானாவாரிப் பயிரிடுவதற்கு எம்.ஆர்.2, எஸ்.1635, எஸ். 34 மற்றும் ஆர்.எப்.எஸ் 175 போன்ற இரகங்கள் ஏற்றவைகளாகும்.
மல்பெரி நாற்றாங்கால்மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள்மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மல்பெரி செடியில் அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலமே விதைகள் உருவாகின்றன. இவ்விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களின் குணாதிசியங்கள் தாய்ச்செடியை ஒத்திருக்காது என்பதால் விதைகள் மூலம் இனப்பெருக்கம் மேற்கொள்ளப்படுவதில்லை.
ஒரு எக்டர் மல்பெரி தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் (800 சதுர மீடடர்) நிலம் தேவை. பூச்சிநோய்த் தாக்காத, ஆறு முதல் எட்டு முதிர்வுடைய செடியிலிருந்த விதைக்குச்சிகளைதேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளமுள்ளதாக, வெட்டவேண்டும். வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.ிதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ளவேண்டும். இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக்குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊறவைத்து பின் நடவேண்டும். நாற்றாங்காலுக்கு, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
குச்சிகளை நட்டது முதல் 45 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ (75,105 - 90 செ.மீ) நடவு மேற்கொள்ளலாம். இவ்விரு வகைகளிலும்,
ஒரு எக்டருக்கு 12,345 செடிகள் பராமரிக்கப்படும். இறவைப்பயிருக்குஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 300120120 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து சிபாரிசு செய்யப்படுகிறது. உயர்விளைச்சல் இரகமான வி.1ற்கு 375140140 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கு இடவேண்டும்.
தழைச்சத்து, நிர்வாகத்தை மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும். ஆசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை மல்பெரி பயிருக்கு ஒரு ஆண்டிற்கு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் இட்டு இராசயன உரத் தேவையை 25 சதவிகிதம் (75 கிலோ) குறைத்துக்கொள்ளலாம். உயிர் உரங்களுடன், சணப்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக வளர்த்து மடக்கி விடுவதால் தழைச்சத்து, பரிந்துரையில் 50 கதவிகிதத்தை (150 கிலோ) குறைத்துக் கொள்ளலாம். பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை எக்டருக்கு ஆண்டிற்கு 10 கிலோ என்ற அளவில் இடும்போது மணிச்சத்து பரிந்துரையில் 25 சதவிகிதத்தை (30 கிலோ) குறைத்துக்கொள்ளலாம். பயிர் மகசூலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பது களைகளே ஆகும்.
இதனால் சுமார் 40 சதவிகிதம் வரை இலை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை கவாத்து பின் களை நீக்கம் செய்யவேண்டும்.மல்பெரியில் ஒரு கிலோ இலை உற்பத்திக்கு சுமார் 320 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் போது சுமார் 40 சதவிகித நீரைச் சேமிக்க முடியும். தண்ணீர் சற்றே உப்புத் தன்மை உடையதாக இருந்தாலும் சொட்டு நீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை.பட்டுப்புழுவின்வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ மற்றும் தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மல்பெரி செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்கவேண்டும்.
No comments:
Post a Comment